Sunday, April 18, 2010
ஜார்ஜ் சிர்ட்டெஷ் பற்றின சிறுகுறிப்பு - ஆர்.அபிலாஷ்
ஜார்ஜ் சிர்ட்டெஷ் தனது எட்டாவது வயதில் ஹ்ங்கெரியிலிருந்து அகதியாக இங்கிலாந்து வந்தார். ஓவியராக பயிற்சி பெற்ற சிர்ட்டெஷ் 1973-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் கவிதைகள் பிரசுரிக்க ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான The Slant Door ஜெப்ரி பேபர் மெம்மோரியல் பரிசை வென்றது. பிறகு சோல்மொண்டெலெய் விருது இவருக்கு வழங்கபபட்டது. இங்கு தரப்பட்டுள்ள கவிதைகளை உள்ளடக்கின அவரது Reel தொகுப்பு 2004-இல் டி.எஸ்.எலியட் பரிசை வென்றது. ஹங்கெரியன் மொழியிலிருந்து செய்துள்ள ஆங்கில மொழியாக்கப் பணிக்காக இவர் European Poetry Translation Prize மற்றும் Derry Prize ஆகிய பரிசுகளை வென்றார். Golden Star விருதும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான எழுத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார். தற்போது மல்யுத்தம் பற்றி நாவல் எழுதி வரும் சிர்ட்டெஷ் University of Ear Anglia-வில் கவிதை மற்றும் படைப்பிலக்கியம் பயிற்றுவித்து வருகிறார். மேலும் படிக்க: http://www.georgeszirtes.co.uk/
Subscribe to:
Post Comments (Atom)
அட அதானே பார்த்தேன்... நானும் ஓவியனே... பயிற்சியெல்லாமில்லை... தானா வந்தது...:)
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஆர்.அபிலாஷ்