=============

புகைப்பட வைபவலட்சுமி
கையுதிர்த்த பொற்காசுகள்
அவள் காலடியில் புதிதாக
மலர்ந்திருந்த ரோஜா பூவின்
மகரந்த துகள்களாக
ஒளிர்ந்திருந்தன
சாலையோரம் பச்சையாய்
வசீகர புதர் ஒன்றில்
அதியமாய் ஆங்காங்கே
இளம்பச்சை பூக்கள்
காற்றிசைத்தால்
சிறகசைத்து கொஞ்சம் பறந்து
மீண்டும் அதே இடத்தில் பூத்தன
பட்டாம் பூச்சிகளாய்
நிலவு மறைத்த
கோபுர வெளிச்சங்களாக
புதிர் கோபங்கள்
பிரியங்களை மறைந்து
காட்டும் மாய உலகில்
காட்சிப் பிழையாக
என் மழைப்பிரியம்
நனைக்கவியலாத தூரத்தில்
நதியோர மணலாக
உன் பிரியம்
வறண்டு போயிருக்க கூடும்
எனது கவிதைகளை வெளியிட்டமைக்கு பனிமுலை ஆசிரியர் குழுவுக்கு நன்றி. பெயரை லாவண்யா சுந்தரராஜன் என்று வெளியிடும் படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteபெயரில் நேர்ந்த பிழைக்கு வருந்துகிறோம்.. தற்போது திருத்தப்பட்டுள்ளது.
ReplyDelete