Saturday, April 17, 2010

மீன் மொழியும் நில‌வும் - லாவ‌ண்யா சுந்த‌ர‌ராஜ‌ன்


மீன் மொழியும் நில‌வும்
======================

அன்று ஒரு நாள்
நில‌வை ம‌ட்டும்
சாட்சியாக்கி
நீர்நிலையொன்றில்
மீனாகி நீந்தி இருந்தோம்
நெடும் நேர‌ம்
நெடுந்தொலைவு
விடிய‌ல் வ‌ந்த‌தும்
ப‌ற‌வையாகி ப‌ற‌ந்து போனாய்
உன‌த‌ருமை கூடு நோக்கி
நீ கைம‌ற‌தியாய்
விட்டு சென்ற‌
சில‌ சிற‌குக‌ளை
வெட்டி எடுக்க‌ இய‌லாத‌
செதில் நினைவுக‌ளை
வ‌ன‌மெங்கும் நிறைந்திருந்தேன்
வாசனை திர‌விய‌ங்க‌ள் பூசி
ஒற்றை நில‌வென்ன‌ செய்யும்
மீன் மொழி
புரிவ‌தில்லை அத‌ற்கு
புரிந்திருந்தால் ஒருவேளை
சிரிக்காம‌ல் புல‌ர்ந்திருக்குமது

2 comments:

  1. நல்ல கவிதை லாவண்யா.

    /நிறைந்திருந்தேன்/
    நிறைத்திருந்தேன்

    ReplyDelete
  2. க‌விதை வெளியிட்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி

    ReplyDelete