Thursday, April 1, 2010

கூகுள்: தொலைந்து போன உயிரெழுத்துக்கள் - மண்ணுண்ணி



தற்போது gmail போன்ற கூகுள் பக்கங்களை திறந்து பார்ப்பவர்கள் ஒரு வினோதமான குழப்பத்துக்கு உள்ளாகிறீர்கள். Vowels எனப்படும் ஆங்கிலத்தின் உயிரெழுத்துக்கள் சரியாக உருப்பெறாமல் எண்களும் தவறான எழுத்துக்களுமாக வேடிக்கையான சொற்கள் விளைகின்றன. இப்படி: @ll3 v0w3ls @rl m1ss1ng fr0m gm@ll. Th11s 1s 3Xtr3m3LY fr(str@t1ng!. அல்லது உயிரெழுத்துக்கள் காணாமல் போகின்றன. Less spam என்பது Lss spm ஆகிறது.



கூகுளின் gmail பொறியியல் மேலாளர் Sam Schillace வெளிப்படையாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவரது செர்வர்களில் ஒன்று a என்கிற உயிரெழுத்தை கண்டுணர தவறியுள்ளது. பிறகு இந்த குளறுபடி வெகுவேகமாகி பரவி பிற உயிரெழுத்துக்களையும் பாதித்துள்ளது. கூகுளின் பொறியாளர்கள் நம் அரசு அதிகாரிகளை விட சீக்கிரமாய் முழித்துக் கொண்டதால் e, i, o, u போன்ற எழுத்துக்களோடு பாதிப்பை கட்டுப்படுத்த முடிந்தது.
சற்று உற்று கவனித்தால் இதை படிக்க ஒன்றும் சிரமமாயில்லை என்பது புரியும். இந்த குறுஞ்செய்தி யுகத்தில் இப்படியான வினோதங்களுக்கு நாம் அபாரமாக பழகியிருக்கிறோம். என் அலுவலகத்தில் நித்யஸ்ரீயை Ns3 என்று அனாயசமாக அழைக்கிறோம். இவ்விசயத்தில் கூகுளை போன்ற இணைய தாதா இப்படி குழறியதாலே இது செய்தியாகிறது. சில இணைய பதிவாளர்கள் இது கூகுள் ஆடும் ஏப்ரல் முட்டாள் ஆட்டமா என்று வியக்கிறார்கள்.

பிரபலங்களின் வீழ்ச்சி நவீன மனிதனுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி அளிக்கும் ஒன்று என்றார் சுஜாதா. எப்படி இருந்தாலும் சறுக்குவது யானையாக இருக்க வேண்டும்!

1 comment:

  1. நல்லத்தகவல் பரிமாற்றம். வாழ்த்துக்கள்

    ReplyDelete