Tuesday, April 6, 2010

தனிமையின் சருகுகள் - அருள்.


அடர்ந்த புங்க மரநிழல்..
சம்மணமிட்டுக் கொண்டிருக்கும் நினைவுகள்..
இலைகள் அசையும் சிறுசிறு கிழிசலில்
சொட்டிக் கொண்டிருந்தது வெளிச்சம்.
சிறிய கால இடைவெளிக்குப் பின் நிகழ்ந்த
சந்திப்பு மானசீகமாய் தொடங்கியது.
எதிர்பார்த்தது போலவே
பாதரசமாய்ச் சிதறும்
சலனமற்ற பேச்சு..
இருப்பினும்
நஞ்சேறிய நினைவுகளோடு
கைகோர்த்தத இந்த பயணம் வினோதம்.
காலம் கறுத்து கட்டுவிரியன் பாம்பாய்
புங்கமர சருகுகளில் சுருண்டு கிடக்கிறது
அனைத்து அறிதல்களோடும் தனிமை.

3 comments:

  1. "இலைகள் அசையும் சிறுசிறு கிழிசலில்
    சொட்டிக் கொண்டிருந்தது வெளிச்சம்."

    oru sirandha haiku. - Dev

    ReplyDelete
  2. this poem leads me to my childhood days in villege .nice disciption

    ReplyDelete
  3. தனிமையின் புரிதல்களோடு செல்லும் வாழ்க்கைப் பயணம்

    ReplyDelete